பிலிப்பின்ஸில் சூறாவளி: பாதுகாப்பான இடங்களில் மக்கள் தஞ்சம்

பிலிப்பின்ஸில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சூறாவளியால் அந்நாடு பலத்த சேதங்களை சந்தித்துள்ளது.
பிலிப்பின்ஸை சூறையாடிய சூறாவளி
பிலிப்பின்ஸை சூறையாடிய சூறாவளி

பிலிப்பின்ஸில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சூறாவளியால் அந்நாடு பலத்த சேதங்களை சந்தித்துள்ளது.

பிலிப்பின்ஸ் நாட்டை வெள்ளிக்கிழமை பலத்த சூறாவளி தாக்கியது. வலிமையான இந்த சூறாவளியால் பிலிப்பின்ஸின் பல பகுதிகள் கடுமையான சேதங்களை சந்தித்தன.

சூறாவளிக் காற்றால் வீடுகளின் கூரைகள் பெயர்த்து விழுந்ததுடன், கட்டடங்களும் இடிந்து விழுந்தன. மேலும் சூறாவளி பாதிப்பிலிருந்து தப்பிக்க மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்பிலிருந்து தப்பித்தனர்.

பலவான் மாகாணத்தில் மேற்கு நோக்கி வீசும் போது மணிக்கு 155 கிலோமீட்டர் (96 மைல்) வேகத்தில் காற்று வீசியது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சூறாவளிக் காற்றால் பலத்த மழை பெய்த நிலையில் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது.

சூறாவளிக் காற்றால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின் தடைகள், தகவல் தொடர்பு துண்டிப்பு மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளன. சூறாவளிக் காற்றால் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள பிலிப்பின்ஸ் அரசானது தெற்கு புகிட்னான் மாகாணத்தில் மேலும் இரண்டு பேர் இறந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

மத்திய செபு மாகாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதுடன் பல உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 புயல்கள் மற்றும் சூறாவளிகளை பிலிப்பைன்ஸ் சந்திக்கிறது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com