பெருந்தொற்றின் மோசமான கட்டத்திற்கு நுழையலாம்: ஒமைக்ரான் குறித்து எச்சரிக்கும் பில் கேட்ஸ்

உலகம் முழுவதும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவது கவலையடைய செய்கிறது என மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
பில் கேட
பில் கேட

ஒமைக்ரான் பாதிப்பு உலகின் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ளது. இந்தியாவில் மட்டும் 213 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது வேகமாக பரிவருவதால் உலக நாடுகள் மத்தியில் அச்சம் நிலவிவருகிறது. அதுமட்டுமின்றி, ஒமைக்ரான் குறித்த தரவுகள் போதுமான அளவில் இல்லாமல் இருப்பதும் பிரச்னையாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், உலகளவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்திருப்பது கவலையடைய செய்துள்ளது என பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார். செய்யவாய்கிழமை இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் விரிவாக பதிவிட்டுள்ள அவர், தனது நெருக்கமான பல நண்பர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது அதிகரித்துள்ளது. எனவே, பெருந்தொற்றின் மோசமான கட்டத்திற்கு நாம் நுழையலாம் என்பதை என்னை பின்தொடர்பவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

வரலாற்றில் மற்ற வைரஸ்களை காட்டிலும் ஒமைக்ரான் வேகமாக பரவிவருகிறது. உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இது கூடிய விரைவில் பரவிவிடும். ஓமிக்ரான் உங்களை எப்படி நோய்வாய்ப்படுத்துகிறது என்பது குறித்து தெரியவில்லை.

டெல்டாவை விட 50 சதவிகிதம் தீவிரமானதாக இருந்தாலும் கூட, இதுவரை நாம் பார்த்ததில் மிக அதிகமான பாதிப்புகளை இது ஏற்படத்தவுள்ளது. ஏனெனில் இது மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இச்சூழலில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அவசியம் குறித்து குறிப்பிட்டுள்ள அவர், முகக்கவசம் அணிவது, பெரிய கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது, தடுப்பூசி செலுத்தி கொள்வது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். அதேபோல, பூஸ்டர் டோஸை செலுத்தி கொள்வது சிறப்பான பாதுகாப்பை அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் குறித்த ட்விட்டர் பதிவுகளை நேர்மறையாக முடித்துள்ள பில் கேட்ஸ், "ஒரு நல்ல செய்தி என்னவென்றால், குறிப்பிட்ட நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு ஆதிக்கம் செலுத்திய பிறது அது வேகமாக நகர்ந்துவிடுகிறது. மூன்று மாதத்திற்கும் குறைவாக அலை நீடிக்கிறது. என்றைக்கும் இப்படி இருக்காது. எப்போதாவது தொற்றுநோய் முடிவுக்கு வரும், நாம் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்து கொள்வோம். அந்த நேரம் விரைவில் வரும்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com