தீவிர ஒமைக்ரானுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட 69,000 சுகாதார பணியாளர்களை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுடன் ஒப்பிட்டு தென்னாப்பிரிக்க மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆய்வு மேற்கொண்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, ஒமைக்ரான் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கான தேவையை குறைப்பதில் 85 சதவிகிதம் பயனுள்ளதாக இருப்பதாக தென்னாப்பிரிக்க அரசு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட 69,000 சுகாதார பணியாளர்களை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுடன் ஒப்பிட்டு தென்னாப்பிரிக்க மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆய்வு மேற்கொண்டது. நவம்பர் 15 முதல் டிசம்பர் 20  வரையிலான காலக்கட்டத்தில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் பாதிப்பு, 82 சதவிகிதத்திலிருந்து 98 சதவிகிதமாக உயர்ந்தது. 

இந்த காலக்கட்டத்தில்தான், ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அந்த ஆய்வை மற்ற விஞ்ஞானிகள் இன்னும் மதிப்பாய்வு செய்யவில்லை. முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டு 6 முதல் 9 மாதங்களுக்கு பிறகு, பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ளும் பட்சத்தில் தடுப்பூசியின் திறன் 0 முதல் 13 நாள்களில் 63 சதவிகிதத்திலிருந்து 1 முதல் இரண்டு மாதங்களில் 85 சதவிகிதமாக உயர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் கூறுகையில், "ஆப்பிரிக்கா இந்த தடுப்பூசியை நம்பியிருப்பதால் இந்தத் தரவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது" என்றார். ஆய்வை குறித்து பேசியுள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் விஞ்ஞானி மத்தாய் மாமன், "காலப்போக்கில், ஒமைக்ரான் மற்றும் டெல்டா வகை கரோனாவுக்கு எதிராக தடுப்பூசி வலுவாகவும் நிலையானதாகவும் மாறியுள்ளது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆராய்ச்சியின் ஓர் அங்கமாக, கிட்டத்தட்ட ஐந்து லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் பாதிப்பு அதிகமுள்ள தென்னாப்பிரிக்காவில் பரவல் தொடங்கியதிலிருந்து 34 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 90,000 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com