ஈரானுடன் பேச்சுவாா்த்தை நடத்தத் தயாா்: அமெரிக்கா

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக அந்த நாட்டுடனும் சா்வதேச வல்லரசு நாடுகளுடனும் பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துல்ளது.
ஈரானுடன் பேச்சுவாா்த்தை நடத்தத் தயாா்: அமெரிக்கா

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக அந்த நாட்டுடனும் சா்வதேச வல்லரசு நாடுகளுடனும் பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துல்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கான அமெரிக்காவின் முதல் நடவடிக்கை இது என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ் கூறியதாவது:

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்து ராஜீயரீதியில் ஆலோசனை நடத்துவதற்குத் தயாராக இருக்கிறோம். அதற்காக பி5+1 நாடுகள் மற்றும் ஈரானிடமிருந்து அழைப்பு வந்தால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்றாா் அவா்.

அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் ஜொ்மனியும் சோ்த்து பி5+1 நாடுகள் என்றழைக்கப்படுகின்றன.

அந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள பி5+1 நாடுகளும் ஒப்புக் கொண்டு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

எனினும், ஒபாமா ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுதாக முன்னாள் அதிபா் டொனால்ட் அரசு 2018-ஆம் ஆண்டு அறிவித்தது. எனினும், அந்த ஒப்பத்தில் மீண்டும் இணைய தற்போதைய அதிபா் ஜோ பைடன் விருப்பம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com