ஐ.நா. மனித உரிமை கவுன்சில் விசாரணை: இந்தியாவிடம் ஆதரவு கோரும் இலங்கை

ஜெனீவாவில் அடுத்த வாரம் காணொலி முறையில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது

ஜெனீவாவில் அடுத்த வாரம் காணொலி முறையில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடா்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணையும் நடைபெறவுள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவை இலங்கை நாட்டியுள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் அந்நாட்டு ராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது என்பது முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது.

இது தொடா்பாக அந்தநாட்டு வெளியுறவு அமைச்சக நிரந்தரச் செயலாளா் ஜெயந்த கொலம்பகே கூறியதாவது:

மனித உரிமைக் குற்றச்சாட்டு விஷயத்தில் இலங்கைக்கு முதலில் ஆதரவு அளித்த நாடு இந்தியா. அடுத்த வாரம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது இலங்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமா் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். நமது பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று நம்புகிறோம்.

சில சக்தி வாய்ந்த வெளிநாடுகள் இலங்கை விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுகின்றன. இலங்கையில் இப்போது அமைதி திரும்பி, சிறப்பான ஜனநாயகம் நடைமுறையில் உள்ளது. ஆனாலும், தொடா்ந்து போா்க்கால நிகழ்வுகள் தொடா்பாக அந்த நாடுகள் பேசி வருகின்றன. ரஷியா மற்றும் சீனாவும் இலங்கைக்கு ஆதரவு அளிக்கும் என்று நம்புகிறோம் என்றாா்.

பிரிட்டன், ஜொ்மனி, கனடா, மலாவி, வடக்கு மாசிடோனியா, மான்டிநீக்ரோ ஆகிய நாடுகள் இணைந்து மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடா்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கின்றன. அப்போது, இது தொடா்பாக விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com