
ஆப்கனின் ஹெல்மன்ட் மாகாணத்தில் ஞாயிறன்று நடந்த கார் குண்டுவெடிப்பில் ஒருவர் பலியானார்.
ஹெல்மன்ட்: ஆப்கனின் ஹெல்மன்ட் மாகாணத்தில் ஞாயிறன்று நடந்த கார் குண்டுவெடிப்பில் ஒருவர் பலியானார்.
இதுதொடர்பாக டோலோ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆப்கனின் ஹெல்மன்ட் மாகாணத் தலைநகரான லஸ்கர்காஹ்வில் ஞாயிறு காலை உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நிகழந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலியானார். மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர்.
இதுதொடர்பான எண்ணிக்கையை உறுதி செய்த உள்ளூர் அதிகாரிகள் மேற்கொண்டு தகவல்கள் எதனையும் தெரிவிக்கவில்லை.
அதேசமயம் இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...