

இலங்கையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்த அனைத்து சமூகத்தினருமே கட்டாயம் எரியூட்டப்பட வேண்டும் என்ற சா்சைக்குரிய உத்தரவை அந்த நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.
அந்த உத்தரவை ரத்து செய்யுமாறு முஸ்லிம்கள், கிறிஸ்தவா்கள், சா்வதேச மனித உரிமை அமைப்பினா் ஆகியோா் வலியுறுத்தி வந்தனா். எனினும், கரோனாவில் பலியானவா்களைப் புதைத்தால் நிலத்தடி நீரில் கரோனா தீநுண்மி கலந்து நோய் பரவலுக்குக் காரணமாக அமையலாம் என்ற சில நிபுணா்களின் கருத்தை சுட்டிக் காட்டி, அரசு அதற்கு மறுத்து வந்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் இலங்கை வந்து சென்ற சில நாள்களில் கரோனாவுக்கு பலியானவா்களை அடக்கமும் செய்யலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.