

இலங்கையில் கரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலைப் புதைக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கரோனா பெருந்தொற்று பரவி வந்தபோது அதிக அளவிலான மக்கள் நாள்தோறும் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது.
கரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் மண்ணிற்குள் ஆழமாக குழிதோண்டி புதைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அதிக அளவிலான உடல்களை புதைப்பதால், நிலத்தடிநீர் மாசு அடைவதாகவும், அதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்படுமென்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இதனால் கரோனாவால் இறந்தவர் உடலைப் புதைக்கவும், எரிக்கவும் இலங்கை அரசு தடை விதித்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் விதிக்கப்பட்டிருந்த இந்த தடையை இலங்கை அரசு தற்போது நீக்கியுள்ளது.
கரோனாவால் இறந்தவரை புதைப்பதற்கு எதிராக இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததைத் தொடர்ந்து தற்போது இந்தத் தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.