
ஆப்கனில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 2 பேர் பலியானார்கள்.
ஆப்கனின் பக்ராமி மாவட்டத்தில் இன்று காலை 9 மணிக்கு குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். 2 பேர் காயமடைந்தனர்.
இதேபோல் நங்கர்ஹார் மாகாணத்தில் வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் ஒருவர் பலியானார். இவ்விரு சம்பவங்களுக்கு இதுவரை எந்தவித பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.