
கோப்புப்படம்
வங்கதேசத்தில் கரோனா பலி எண்ணிக்கை 8,400ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், வங்கதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 12,348 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களில் புதிதாக 407 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 5,45,831ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர்.
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 8,400ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 609 பேர் குணமடைந்தனர்.
இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,96,107ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.