கரோனாவை விட கொடூர புதிய வைரஸ் உலகைத் தாக்கக் கூடும்: எச்சரிக்கும் விஞ்ஞானி

கரோனா பேரிடரிலிருந்து மெல்ல மீண்டு, இயல்பு நிலைக்குத் திரும்ப உலகமே போராடி வரும் நிலையில், புதிய கொடூரமான வைரஸ் உலகைத் தாக்கக் கூடும் என்று விஞ்ஞானி எச்சரித்துள்ளார்.
கரோனாவை விட புதிய கொடூர வைரஸ் உலகைத் தாக்கக் கூடும்: எச்சரிக்கும் விஞ்ஞானி
கரோனாவை விட புதிய கொடூர வைரஸ் உலகைத் தாக்கக் கூடும்: எச்சரிக்கும் விஞ்ஞானி


புது தில்லி: கரோனா பேரிடரிலிருந்து மெல்ல மீண்டு, இயல்பு நிலைக்குத் திரும்ப உலகமே போராடி வரும் நிலையில், புதிய கொடூரமான வைரஸ் உலகைத் தாக்கக் கூடும் என்று விஞ்ஞானி எச்சரித்துள்ளார்.

2019-ஆம் ஆண்டு சீனத்தில் உருவான கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசிகள் பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்டு, தடுப்பூசி போடும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால், விரைவில் கரோனா பேரிடரிலிருந்து மீண்டுவிடுவோம் என்ற சிறு நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

ஆனால், அதற்குள் அதிதீவிர கரோனா உலகம் முழுவதும் பரவி, மற்றொருபக்கம் மக்களுக்கு அச்சத்தையும் உண்டாக்கியுள்ளது.

இந்தநிலையில்தான், உலகத்தை இன்னும் அதிதீவிர வைரஸ்கள் தாக்கக் கூடும் என்ற விஞ்ஞானிகளின் எச்சரிக்கை, உலகம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வாய்ப்பு ஏற்படுமா என்ற கேள்வியை எழச் செய்துள்ளது.

அதன்படி, எபோலா வைரஸைக் கண்டுபிடித்த விஞ்ஞானி வெளியிட்டிருக்கும் எச்சரிக்கை செய்தியில், உலகம் மிகக் கொடூரமான வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் என்றும், அந்த எக்ஸ் எனப்படும் மர்ம நோய் கரோனாவை விட மிக வேகமாகப் பரவுவதாகவும், எபோலாவை விட உயிர்க்கொல்லியாகவும் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானி மேலும் கூறியிருப்பதாவது, மனிதக்குலம், மிக விரைவில் இன்னும் பல மோசமான வைரஸ் தாக்குதல்களை சந்திக்கக் கூடும் என்றும், அந்த எக்ஸ் எனும் மர்ம நோய், மிக மோசமான உயிர்க்கொல்லியாகவும், அடுத்த பேரிடரை ஏற்படுத்க் கூடியதாகவும் இருக்கலாம் என்றும் உலகம் முழுவதையும் அது ஆட்டிப்படைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்ரிக்காவின் மழைக்காடுகளிலிருந்து புதிய வைரஸ்கள் உருவாகி அது உலகம் முழுவதும் பரவும் என்றும் விஞ்ஞானி தம்பும் தெரிவித்துள்ளார்.

ஏராளமான வைரஸ்கள் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவி, மனிதகுலத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். ஏற்கனவே இதுபோன்று மஞ்சள் காமாலை, ரேபிஸ், கரோனா உள்ளிட்ட வைரஸ்கள் இப்படித்தான் மனிதர்களுக்குப் பரவி பேரிடரை ஏற்படுத்தியதாகவும், இன்னும் எதிர்காலத்திலும் கரோனாவை விடவும் கொடிய வைரஸ்கள் மனிதகுலத்தைத் தாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com