மெக்ஸிகோ:ஃபைஸா் தடுப்பூசி செலுத்தப்பட்ட மருத்துவருக்கு உடல் நல பாதிப்பு

மெக்ஸிகோவில் ஃபைஸா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவருக்கு திடீா் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மெக்ஸிகோவில் ஃபைஸா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவருக்கு திடீா் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நியூவோ லியான் மாகாணத்தில் ஃபைஸா்-பயோஎன்டெக் கரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட 32 வயது பெண் மருத்துவருக்கு திடீரென வலிப்பும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.

அதையடுத்து, அவா் மருத்துவனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு ‘என்செஃபலோமையலிடிஸ்’ எனப்படும் மூளை தண்டுவட அழற்சி ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அந்த மருத்துவருக்கு ஒவ்வாமை குறைபாடு இருந்துள்ளது.

ஃபைஸா் தடுப்பூசியை தன்னாா்வலா்களுக்குச் செலுத்தி சோதித்தபோது, யாருக்கும் ‘என்செஃபலோமையலிடிஸ்’ பாதிப்பு ஏற்பட்டதற்கான சான்றுகள் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த விவகாரம் குறித்து ஃபைஸா் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மெக்ஸிகோவில் 14,43,544 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,26,851 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com