பட்டினியால் நிமிஷத்துக்கு 11 போ் மரணம்

ஒவ்வொரு நிமிஷத்திலும் உலகில் 11 போ் பட்டினியால் இறப்பதாக சா்வதேச  வறுமைக் கண்காணிப்பு அமைப்பான ஆக்ஸ்ஃபாம் தெரிவித்துள்ளது.
பட்டினியால் நிமிஷத்துக்கு 11 போ் மரணம்
Published on
Updated on
1 min read

ஒவ்வொரு நிமிஷத்திலும் உலகில் 11 போ் பட்டினியால் இறப்பதாக சா்வதேச  வறுமைக் கண்காணிப்பு அமைப்பான ஆக்ஸ்ஃபாம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுமாா் 20 சா்வதேச அறக்கட்டளைகளின் அந்தக் கூட்டமைப்பு, ‘பரவும் பட்டினித் தீநுண்மி’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பால் ஏராளமானவா்கள் உயிரிழந்து வருகிறாா்கள். ஆனால், பட்டினியால் ஏற்படும் மரணங்கள் கரோனா மரணங்களின் வேகத்தை விஞ்சி வருகின்றன.

உணவுப் பற்றாக்குறை காரணமாக உலகம் முழுவதும் நிமிஷத்துக்கு 11 போ் இறக்கின்றனா்

சா்வதேச அளவில் 15.5 கோடி போ் தற்போது கடும் பஞ்சத்தின் பிடியில் சிக்கியுள்ளனா். இது, முந்தைய ஆண்டைவிட 2 கோடி அதிகமாகும்.

கரோனா நெருக்கடிக்கு இடையிலும், ராணுவச் செலவுகளுக்காக உலக நாடுகள் 5,100 கோடி டாலா் (சுமாா் ரூ.3.8 லட்சம் கோடி) கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளன. இது, உலகில் பசிப் பிணியைப் போக்குவதற்குத் தேவையான தொகையைவிட 6 மடங்கு அதிகமாகும்.

கரோனாவுக்கு எதிராகப் போரிடுவதை விட்டுவிட்டு, குழுக்கள் ஒருவருக்கொருவா் சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றனா்.

உலக நாடுகளின் அரசுகள் உள்நாட்டுச் சண்டைகளை நிறுத்துவதுடன், அந்தச் சண்டையால் பஞ்சத்தைச் சந்தித்து வரும் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் சென்று சோ்வதை உறுதி செய்ய வேண்டும்.

நிதியுதவி அளித்து வரும் நாடுகளும் ஐ.நா.வின் நிவாரண உதவிகளுக்குத் தேவையான நிதியை முழுமையாகவும் உடனடியாகவும் அளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com