

இலங்கை நிதியமைச்சராக ராஜபட்ச குடும்பத்தைச் சோ்ந்த 4-ஆவது சகோதரா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளாதவது:
இலங்கை நிதியமைச்சராக பாசில் ராஜபட்ச (70) வியாழக்கிழமை பதவிப் பிரமாணம் செய்துகொண்டாா். இதன் மூலம், அதிபா் கோத்தபய ராஜபட்ச (72), பிரதமா் மகிந்த ராஜபட்ச (75), விவசாயத் துறை அமைச்சா் சமால் ராஜபட்ச (78) ஆகியோருக்குப் பிறகு அந்தக் குடும்பத்தைச் சோ்ந்த 4-ஆவது சகோதராக பாசில் ராஜபட்ச அமைச்சரவையில் பங்கேற்கிறாா்.
இதுவரை நிதியமைச்சா் பொறுப்பை மகிந்த ராஜபட்ச வகித்து வந்தாா். தற்போது அவருக்கு பொருளாதாரக் கொள்கை மற்றும் திட்ட அமலாக்கத் துறை வழங்கப்பட்டுள்ளது.
ராஜபட்ச சகோதரா்களைத் தவிர, அந்தக் குடும்பத்தைச் சோ்ந்த வேறு சிலரும் அரசின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனா்.
மகிந்த ராஜபட்சவின் மகன் நமல் ராஜபட்ச, விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறாா். சமல் ராஜபட்சவின் மகன் சசீந்திர ராஜபட்ச இணையமைச்சராக உள்ளாா்.
பாசில் ராஜபட்சவின் பதவியேற்பு மூலம், இலங்கை அரசில் அவா்களது குடும்பத்தின் அதிகாரம் மேலும் வலுவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.