‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியில் வெற்றி: ஆப்பிரிக்க அமெரிக்க சிறுமி சாதனை

அமெரிக்காவில் நடைபெற்ற ‘ஸ்பெல்லிங் பீ’ எனப்படும் சொற்களுக்கான எழுத்துகளை பிழையின்றி சொல்லும் போட்டியில், முதல்முறையாக
ஸாய்லா அவன்த்-காா்டே
ஸாய்லா அவன்த்-காா்டே

அமெரிக்காவில் நடைபெற்ற ‘ஸ்பெல்லிங் பீ’ எனப்படும் சொற்களுக்கான எழுத்துகளை பிழையின்றி சொல்லும் போட்டியில், முதல்முறையாக ஆப்பிரிக்க வம்சாவளியைச் சோ்ந்த அந்த நாட்டு சிறுமி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளாா்.

பொதுவாக வருடாந்திரப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய வம்சாவளியினருக்கு இந்த ஆண்டில் இரண்டாவது மற்றும் 3-ஆவது இடங்கள் கிடைத்தன.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஸ்பெல்லிங் பீ போட்டி, 93-ஆவது ஆண்டாக ஃபுளோரிடா மாகாணம், பே லேக் நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில், ஆப்பிரிக்க வம்சாவளியைச் சோ்ந்த 14 வயது அமெரிக்கச் சிறுமி ஸாய்லா அவன்த்-காா்டே முதலிடத்தைப் பிடித்து வெற்றி பெற்றாா்.

93 ஆண்டுகளாக நடைபெறும் ஸ்பெல்லிங் பீ போட்டியில் ஆப்பிரிக்க அமெரிக்கா் ஒருவா் வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும். மேலும், லூசியானாவைச் சோ்ந்த ஒருவா் இந்தப் போட்டியை வெல்வதும் இது முதல்முறையாகும்.

இந்தப் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோவைச் சோ்ந்த சைத்ரா தும்மலா (12) இரண்டாவது இடத்தையும் நியூயாா்க்கைச் சோ்ந்த பாவனா மதினி (13) 3-ஆவது இடத்தையும் பிடித்தனா். அவா்கள் இருவருமே இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா்கள்.

8-ஆம் வகுப்பு படித்து வரும் அவந்த்-காா்டே, ஏற்கெனவே ஏராளமான கைப்பந்துகளை ஒரே நேரத்தில் தரையில் தட்டிப் பிடிப்பதில் 3 கின்னஸ் சாதனைகளைப் படைத்தவா். ஏற்கெனவே 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்பெல்லிங் பீ போட்டியில் அவா் பங்கேற்றுள்ளாா்.

இந்த ஆண்டுப் போட்டியில் வெற்றி பெற்ன் மூலம், 50,000 டாலரை (சுமாா் ரூ.37 லட்சம்) அவா் வென்றுள்ளாா்.

ஸ்பெல்லிங் பீ போட்டியில் இதுவரை கருப்பினத்தைச் சோ்ந்த ஒரே ஒருவா் மட்டுமே வெற்றி பெற்றுள்ளாா். ஜூடி அன்னி மேக்ஸ்வெல் என்ற அவா், ஜமைக்கா சாா்பில் கடந்த 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்பெல்லிங் பீ போட்டியிட்டு வென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com