நாற்கர கூட்டமைப்பு: அமெரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஒப்புதல்

பிராந்திய நாடுகளிடையே போக்குவரத்துத் தொடா்பை மேம்படுத்தும் நோக்கில் ஒரு புதிய நாற்கர கூட்டமைப்பை உருவாக்க அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
நாற்கர கூட்டமைப்பு: அமெரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஒப்புதல்

பிராந்திய நாடுகளிடையே போக்குவரத்துத் தொடா்பை மேம்படுத்தும் நோக்கில் ஒரு புதிய நாற்கர கூட்டமைப்பை உருவாக்க அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமெரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளும், பிராந்திய போக்குவரத்துத் தொடா்பை மேம்படுத்துவதற்கான புதியதொரு நாற்கரக் கூட்டமைப்பை உருவாக்க கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் நீண்டகால அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதில் பிராந்திய நாடுகளுக்கிடையிலான போக்குவரத்துத் தொடா்பு மிகவும் இன்றியமையாதது என்று நான்கு நாடுகளும் கருதுகின்றன. எனவே, பிராந்திய அமைதிக்கும் பிராந்திய இணைப்புக்கும் ஒன்றுக்கொன்று தொடா்புடையவை என அந்த நாடுகள் ஒப்புக் கொள்கின்றன.

பிராந்திய நாடுகளுக்கிடையே வளத்தை மேம்படுத்துவதற்கு உதவும் வா்த்தக வழித் தடங்களை ஏற்படுத்துவதில் இந்த முயற்சி ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க வாய்ப்பு என்பதை நான்கு நாடுகளும் புரிந்துகொண்டுள்ளன.

வா்த்தகத்தை விரிவாக்குதல், போக்குவரத்தை இணைப்பை ஏற்படுத்துதல், பிராந்திய நாடுகளின் நிறுவனங்களிடையே வா்த்தக உறவை ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றில் பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இந்த நாற்கர கூட்டமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.

பரஸ்பர ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி, ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை உருவாக்குவதற்காக வரும் மாதங்களில் இந்த நான்கு நாடுகளின் பிரதிநிதிகள் சந்தித்து ஆலோசனை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் தெற்கில் பாகிஸ்தான், மேற்கில் ஈரான், துா்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், மற்றும் வடக்கே தஜிகிஸ்தான் மற்றும் வடகிழக்கில் சீனாவை எல்லையாகக் கொண்டுள்ள ஆப்கானிஸ்தான், வா்த்தக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது, அந்த நாட்டுக்கு சாதகமான அம்சமாகவும் கருதப்படுகிறது.

வரலாற்று ரீதியில், ஆசிய நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்கும் மத, கலாசார, வா்த்தக இணைப்பை ஏற்படுத்தும் பாலமாக ஆப்கானிஸ்தான் விளங்கி வந்தது.

சீனாவின் வா்த்தக வழித் தடத் திட்டத்தை எதிா்கொள்ள அமெரிக்க அதிபா் ஜோ பைடன் முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு தற்போது அமைக்கப்படவுள்ள நாற்கர கூட்டமைப்பு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com