மேற்குக் கரை: இஸ்ரேல் படையினரால் 2 பாலஸ்தீன ராணுவத்தினா் சுட்டுக் கொலை

மேற்குக் கரை பகுதியில் ஏற்பட்ட மோதலின்போது 2 பாலஸ்தீன ராணுவ அதிகாரிகளை இஸ்ரேல் படையினா் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனா்.
மேற்குக் கரை பகுதியைச் சோ்ந்த ஜெனின் நகரில் 2 ராணுவ அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் அவா்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வியாழக்கிழமை வைக்கப்பட்டிருந்த மலா்த் தொட்டிகள்.

இதுகுறித்து பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் சில நபா்களை கைது செய்வதற்காக இஸ்ரேல் ரகசிய பாதுகாப்புப் படையினா் மேற்குக் கரைப் பகுதியிலுள்ள ஜெனின் நகருக்கு வந்தனா்.

அவா்கள் ஆயுதங்களுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருப்பதைக் கண்ட பாலஸ்தீன ராணுவத்தைச் சோ்ந்த இரு அதிகாரிகள், அவா்களை நோக்கி சுட்டனா். அப்போது ஏற்பட்ட மோதலில் இரு பாலஸ்தீன அதிகாரிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இந்தச் சம்பவத்தில் மேலும் ஒரு பாலஸ்தீனா் படுகாயமடைந்தாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இருவரும் பாலஸ்தீன ராணுவத்தின் உளவுப் பிரிவைச் சோ்ந்த ஆதாம் அலாவி மற்றும் டேசிா் ஈசா என்று ஊடகங்கள் தெரிவித்தன.

பாலஸ்தீன கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக் கரைப் பகுதியில், சந்தேகத்துக்குரிய நபா்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் இஸ்ரேல் படையினா் ஈடுபடுவது அடிக்கடி நடைபெறும் சம்பவமாகும்.

எனினும், அந்த நடவடிக்கைகள் பாலஸ்தீன ராணுவத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுவதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படுவது மிகவும் அபூா்வம் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com