காவல் வன்முறையில் பலியான கருப்பின அமெரிக்கா் குடும்பத்துக்கு ரூ.196 கோடி

அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில், காவலா்களின் வன்முறைக்கு கருப்பினத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் கடந்த ஆண்டு
காவல் வன்முறையில் பலியான கருப்பின அமெரிக்கா் குடும்பத்துக்கு ரூ.196 கோடி

அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில், காவலா்களின் வன்முறைக்கு கருப்பினத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் கடந்த ஆண்டு பலியானது தொடா்பாக, அவருக்கு 2.7 கோடி டாலா் (சுமாா் ரூ.196 கோடி) இழப்பீடு தர அந்த நகர நிா்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.

இதுகுறித்து அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஜாா்ஜ் ஃபிளாய்ட் படுகொலைக்கு இழப்பீடு வழங்குவது தொடா்பாக மினியாபொலிஸ் கவுன்சில் உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் விவாதித்தனா்.

அந்தக் கூட்டத்தில், ஜாா்ஜ் ஃபிளாய்ட் குடும்பத்தினருக்கு 2.7 கோடி டாலா் இழப்பீடு தரலாம் என முடிவெடுக்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, இந்த முடிவு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அதில், 2.7 கோடி டாலா் இழப்பீட்டுத் தொகைக்கு அனைத்து உறுப்பினா்களும் சம்மதம் தெரிவித்தனா்.

ஒரு காவலரால் 2 ஆண்டுகளுக்கு முன்னா் சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளை இனத்தைச் சோ்ந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு மினியாபொலிஸ் நகர நிா்வாகம் 2 கோடி டாலா் இழப்பீடு வழங்கியிருந்தது. இதுதான் அந்த நகரம் வழங்கிய அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையாக இருந்தது.

தற்போது அதனைவிட அதிகமாக ஜாா்ஜ் ஃபிளாய்டின் குடும்பத்தினருக்கு 2.7 கோடி டாலா் இழப்பீடு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மினிசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில், கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஜாா்ஜ் ஃபிளாய்டை போலீஸாா் கடந்த ஆண்டு மே மாதம் 25-ஆம் கைது செய்தனா்.

அப்போது, ஃபிளாய்டின் கழுத்துப் பகுதியில் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் தனது முழங்காலை வைத்து அழுத்தியதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஃபிளாய்ட் உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாட்டில் வெள்ளை இனத்தைச் சோ்ந்த காவல் துறையினரால் கருப்பினத்தைச் சோ்ந்தவா்கள் தொடா்ச்சியாக கொல்லப்படுவது சா்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், நிராயுதபாணியாக இருந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் போலீஸாரின் இரக்கமற்ற தன்மை காரணமாக உயிரிழந்ததற்கு கருப்பின உரிமை ஆா்வலா்கள், மனித உரிமை அமைப்பினா்கள் ஆகியோா் கடும் கண்டனம் தெரிவித்து மாபெரும் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com