
வங்கதேச மருத்துவமனையில் தீ விபத்து: 3 கரோனா நோயாளிகள் பலி
டாக்கா: மேற்கு வங்க மாநிலத்தின் அரசு மருத்துவமனையில் இன்று காலை நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 3 கரோனா நோயாளிகள் பலியாகினர்.
பலியான மூன்று நோயாளிகளும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் 14 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்த அதிக அழுத்தம் கொண்ட ஆக்ஸிஜன் கருவி இன்று காலை 8 மணியளவில் வெடித்ததில் பயங்கர தீ விபத்து நேரிட்டதாக மருத்துவமனை இயக்குநர் நஸ்மல் ஹக் தெரிவித்துள்ளார்.
தீ விபத்து நேரிட்டதும், அங்கிருந்து மற்ற நோயாளிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்ட போது, 3 கரோனா நோயாளிகள் பலியாகவிட்டதாகவும் கூறினார். அவர்கள் அனைவரும் கவலைக்கிடமான நிலையில், செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சைப் பெற்று வந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுபோல கடந்த ஆண்டு மே மாதம் வேறொரு மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில் 5 நோயாளிகள் மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.