
நேபாளத்தில் நிலவி வரும் அரசியல் பதற்றத்தைத் தணிப்பதற்காக அதிபா் வித்யா தேவி பண்டாரி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பிரதமா் கே.பி. சா்மா ஓலி, அவருடன் கூட்டணி ஆட்சி அமைத்து தற்போது பிரிந்துள்ள முன்னாள் பிரதமா் புஷ்ப கமல் பிரசண்டா உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்றனா்.
எனினும், முன்னாள் பிரதமா்களான பாபுராம் பட்டாராய், மாதவ் குமாா் நேபாள், ஜல்நாத் கனால் ஆகிய மூவரும் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தனா். அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்காமல் பிரதமா் சா்மா ஓலிக்கு ஆதரவாக அதிபா் வித்யா தேவி செயல்படுவதாக அவா்கள் குற்றம் சாட்டினா்.