
பெருகி வரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறு இறுதியில் நடக்கவிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு ஆன்லைனுக்கு மாறிய சம்பவம் நடந்துள்ளது.
பிரசல்ஸ்: பெருகி வரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறு இறுதியில் நடக்கவிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு ஆன்லைனுக்கு மாறிய சம்பவம் நடந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் அதிபர்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு, இந்த வார இறுதியில் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் ஜெர்மனியின் பிரசல்ஸ் நகரத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது ஒன்றியத்தின் பெரும்பாலான நாடுகளில் கரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை வேகமாகப் பரவி வருவதால் தற்போது அந்த மாநாட்டினை ‘விடியோ கான்பெரன்ஸிங்’ முறையில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரான சார்லஸ் மைக்கேலின் செய்தித் தொடர்பாளர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பொதுவாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒன்றியத்தின் தலைவர்கள் கூடிப் பேசுவது வழக்கமாகும். தற்போது கரோனா சூழலின் நடுவிலும் அவ்வப்போது விடியோ வழி சந்தித்து இருந்தாலும், தற்போது நடைபெற உள்ள மாநாடு, 2020-இன் மத்தியில் நடைபெற்ற சந்திப்பிற்குப் பிறகு நடைபெற உள்ள ஒன்றாகும்.
மாநாட்டின் செயல் திட்டங்களில் கரோனா குறித்த விவாதங்கள் முக்கியத்துவம் பெரும் அதேநேரத்தில் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கரோனா தடுப்பூசி பிரசாரத்தை முன்னெடுப்பது மற்றும் ரஷ்யா, சீனா உடனான உறவுகளைப் பராமரிப்பது குறித்தும் பேச்சுக்கள் நடைபெறும் என்று தெரிகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...