
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,299 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாஸ்கோ: ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,299 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கரோனா கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 84 நகரங்களில் 9,299 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 1,117 பேருக்கு ( 12 சதவிகிதம்) நோய் அறிகுறிகள் இல்லாமலே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்துடன் ஒட்டுமொத்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 4,456,869-ஆக அதிகரித்துள்ளது. தொற்று வீதமானது 0.22 என்ற விகிதத்தில் அதிகரித்து வருகிறது.
நகரங்களின் வரிசையில் 1,511 நோயாளிகளுடன் மாஸ்கோ முதலிடத்திலும், 881 நோயாளிகளுடன் செயின்ட் பீட்டர்ஸ்பார்க் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
அதேநேரம் இதுவரை கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்னிக்கை 4,069,395-ஆக உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...