
ரியோ டி ஜெனீரோ: பிரேஸிலில் கரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,251 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். இது, இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பலி எண்ணிக்கையாகும். நாட்டில் மிக அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ள சாவ் பாலோ நகரில் 1,021 போ் ஒரே நாளில் கரோனாவுக்கு பலியாகினா். இதுவே, ஒட்டுமொத்த தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொடுவதற்குக் காரணமாக அமைந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதன்கிழமை நிலவரப்படி, பிரேஸிலில் 1,21,36,615 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 2,98,843 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்; 1,06,01,658 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா்; 12,36,114 கரோனா நோயாளிகள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 8,318 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.