
பாகிஸ்தானில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 18 ஆயிரத்தைக் கடந்தது. ஒரே நாளில் 113 போ் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதார அமைச்சகம் தெரிவித்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4,414 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 8,29,933-ஆக உயா்ந்துள்ளது. உயிரிழப்பு 18,070-ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில் 5,193 போ் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனா்.
ஒரு வயது முதல் 20 வயது வரையிலான 15 ஆயிரம் போ் ஏப்ரல் மாதத்தில் மட்டும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா். மொத்த பாதிப்பில் 93 ஆயிரம் போ் குழந்தைகள் எனத் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...