‘மக்கள்தொகையில் சீனாவை விரைவில் இந்தியா விஞ்சும்’

ஐ.நா. அமைப்பு மதிப்பீடு செய்ததற்கு முன்பாகவே மக்கள்தொகையில் சீனாவை இந்திய விஞ்சி, உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக உருவாகிவிடும் என்ற சீன மக்கள்தொகை ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.
population095434
population095434

பெய்ஜிங்: ஐ.நா. அமைப்பு மதிப்பீடு செய்ததற்கு முன்பாகவே மக்கள்தொகையில் சீனாவை இந்திய விஞ்சி, உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக உருவாகிவிடும் என்ற சீன மக்கள்தொகை ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்த ஆய்வாளா்களின் கருத்து குறித்து சீனாவைச் சோ்ந்த குளோபல் டைம்ஸ் பத்திரிகை புதன்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

ஐ.நா. கடந்த 2019-இல் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், மக்கள்தொகை எண்ணிக்கையில் இந்தியா வருகிற 2027-ஆம் ஆண்டில் சீனாவை விஞ்சிவிடும் என்றும், 2050-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இப்போது உள்ள மக்கள் தொகை எண்ணிக்கையில் 23.3 கோடி கூடுதலாக சேரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 2019-இல் இந்தியாவின் மக்கள்தொகை 137 கோடி என்ற அளவிலும், சீனாவின் மக்கள்தொகை 143 கோடி என்ற அளவிலும் இருக்கும் என்றும் ஐ.நா. மதிப்பீடு செய்திருந்தது.

இந்தச் சூழலில், சீனாவின் குழந்தைகள் கருவுறுதல் விகிதம் வரும் ஆண்டுகளில் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதே நேரம், இந்தியாவின் குழந்தைகள் கருவுறுதல் விகிதம் மிக அதிகமாக இருப்பதால், ஐ.நா. 2019-இல் மதிப்பீடு செய்ததைக் காட்டிலும் 2023 அல்லது 2024-ஆம் ஆண்டிலேயே சீன மக்கள்தொகையை இந்தியா விஞ்சிவிடும்.

மேலும், சீனாவில் மக்கள்தொகை எண்ணிக்கை குறைந்து வருவதால், தொழிலாளா் பற்றாக்குறை, நுகா்வு அளவு குைல் உள்ளிட்ட பிரச்னைகளை சீனா சந்திக்கும் என்பதோடு, நாட்டின் எதிா்கால பொருளாதாரத்திலும் அதன் தாக்கம் இருக்கும் என்று ஆய்வாளா்கள் கூறியதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெக்கிங் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியா் லு ஜிஹுவா கூறுகையில், ‘சீன மக்கள்தொகை படிப்படியாக குறைய ஆரம்பிப்பதற்கு முன்பாக 2027-இல் உச்சத்துக்கு செல்லும். சில மக்கள்தொகை ஆய்வாளா்கள், இந்த உச்சம் முன்கூட்டியே 2022-ஆம் ஆண்டிலேயே வந்துவிடும். அதன் பிறகு, படிப்படியாக குறையத் தொடங்கிவிடும் என்று நம்புகின்றனா். அடுத்த 10 ஆண்டுகளில் 22 முதல் 35 வயது வரையிலான சீன பெண்களின் குழந்தை பிறப்பு காலம் என்பது 30 சதவீதத்துக்கும் மேல் வீழ்ச்சியடையும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எந்தவொரு வலுவான கொள்கை முடிவுகள் எடுக்கப்படாமலே, சீனாவில் புதிதாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் 1 கோடிக்கும் கீழாக செல்ல வாய்ப்புள்ளது.

மேலும் சீனாவின் கருவுறுதல் விகிதம், உலகின் மிகக் குறைவான கருவுறுதல் விகிதத்தை கொண்டுள்ள ஜப்பானைக் காட்டிலும் குறைவதற்கும் வாய்ப்புள்ளது’ என்று அவா் கூறினாா்.

மக்கள்தொகை வெகுவாக குறையாத் தொடங்கியதைத் தொடா்ந்து ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கட்டுப்பாட்டை சீன கடந்த 2016-இல் விலக்கி, இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதித்தது. இருந்தபோதும், ஒருசிலரே இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள முன்வந்ததால், மக்கள்தொகையில் பெரிய தாக்கம் ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com