

காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் தலிபான்களின் மூத்த தளபதி கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினர். காபூலில் மொத்தம் இரண்டு பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பேர் பலியாகியுள்ளனர், 50 பேர் படுகாயமடைதுள்ளனர்.
இந்த தாக்குதலின்போது, ராணுவ மருத்துவமனையிலிருந்த தலிபான் மூத்த தளபதி மௌலவி ஹம்துல்லாஹ் முக்லிஸ் கொல்லப்பட்டதாக ஏ.பி.எஃப். செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காபூலை தலிபான்கள் கைப்பற்றியபோது அதிபர் மாளிகையில் புகுந்த முதல் தலிபான் தளபதி மௌலவி ஹம்துல்லாஹ் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.