ஆப்கனில் வெளிநாட்டு கரன்சிகளைப் பயன்படுத்த தடை: தலிபான்

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு நாணயங்களைப் பயன்படுத்த தடை விதித்து தலிபான்கள் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
ஆப்கனில் வெளிநாட்டு கரன்சிகளைப் பயன்படுத்த தடை: தலிபான்

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு நாணயங்களைப் பயன்படுத்த தடை விதித்து தலிபான்கள் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இது வீழ்ச்சியின் விளிம்பில் உள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்று தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு சர்வதேச நிதியுதவி திரும்பப் பெறப்பட்டதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் சந்தைகளில் அமெரிக்க டாலர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பாக்கிஸ்தான் போன்ற ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளின் எல்லைகளில் வர்த்தகம் செய்வதற்கும் பெரும்பாலும் அமெரிக்க டாலர்களே பயன்படுத்தப் படுகின்றன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க டாலர் உள்பட அனைத்து வெளிநாட்டு நாணயங்களின் பயன்பாடுகளுக்கும் தடை விதித்து தலிபான் அமைப்பு அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

"நாட்டின் நாணயங்களின் மதிப்பையும், பொருளாதாரத்தையும் மீட்டெடுக்கும் முயற்சியாக, ஆப்கானி என்ற சொந்த நாணயங்களை மட்டுமே அனைத்து ஆப்கானியர்களும் தங்கள் ஒவ்வொரு வர்த்தகத்திலும் பயன்படுத்த வேண்டும்" என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹிட் ஆன்லைனில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

மேலும் வெளிநாட்டு நாணயங்களை பயன்படுத்தினால் சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி நாடு முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா் தலிபான்கள்.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதைத் தொடா்ந்து, அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் பற்றாக்குறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. உலக வங்கியும் நாட்டில் திட்டங்களுக்கான நிதியை நிறுத்தியது. வெளிநாட்டு உதவிகளும் நிறுத்தப்பட்டதால் ஆப்கானிஸ்தான் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானின் பொருளாதார நெருக்கடிகள் அண்டை நாடுகளான துருக்கி மற்றும் ஐரோப்பாவை பாதிக்கக்கூடும். நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டு 30 சதவிகித்தற்கு  சுருங்கக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்தது.

வறட்சி, போர் மற்றும் கரோனா பெருந்தொற்று போன்றவற்றால் கோடிக்கணக்கான ஆப்கானிஸ்தார்கள் பட்டினியைச் சந்திக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் எச்சரித்தது.

எவ்வாறாயினும், ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான பேரழிவைத் தவிர்க்க விரும்புவதாக கூறிய மேற்கத்திய சக்திகள், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானுக்கு நிவாரணப் பொருள்களை எவ்வாறு அளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறினாலும், தலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க மறுத்துவிட்டன.

இந்தச் சூழலில், நாடு கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு நாணயங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ள தலிபான்கள் நடவடிக்கை வீழ்ச்சியின் விளிம்பில் உள்ள ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை மேலும் சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com