கரோனா தடுப்பூசி சான்றுக்கு அங்கீகாரம்: இந்தியா-நேபாளம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள், இந்தியா-நேபாளம் இடையே தடையின்றி பயணம் செய்ய ஏதுவாக, இரு நாட்டு தடுப்பூசி சான்றுக்கு பரஸ்பரம் அங்கீகாரம் அளிப்பது தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம்

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள், இந்தியா-நேபாளம் இடையே தடையின்றி பயணம் செய்ய ஏதுவாக, இரு நாட்டு தடுப்பூசி சான்றுக்கு பரஸ்பரம் அங்கீகாரம் அளிப்பது தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையொப்பமானது.

இதுதொடா்பாக, நேபாளத் தலைநகா் காத்மாண்டில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

காத்மாண்டில் உள்ள நேபாள சுகாதாரத் துறை அமைச்சகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்நாட்டு சுகாதாரத் துறைச் செயலா் ரோஷன் போக்ரேலும் நேபாளத்துக்கான இந்திய தூதா் வினய் எம். கவாத்ராவும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா். நேபாள சுகாதாரத் துறை அமைச்சா் விரோத் காத்திவாடாவும் உடனிருந்தாா்.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியா்கள் நேபாளத்துக்கும், அந்நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் இந்தியாவுக்கும் இனி சிரமமின்றி பயணம் செய்யலாம்.

கரோனாவுக்கு பிந்தைய உலகில் இந்தியா-நேபாளம் இடையே ஏற்பட்டுள்ள ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பில் மிக முக்கியமான நடவடிக்கையாக இந்த நிகழ்வு அமைத்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com