கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டேன்

இந்தியாவில் இருந்து பெறப்பட்ட கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியையே தாம் செலுத்திக் கொண்டதாக ஐ.நா. பொதுச் சபைத் தலைவா் அப்துல்லா சாகித் தெரிவித்துள்ளாா்
கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டேன்

இந்தியாவில் இருந்து பெறப்பட்ட கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியையே தாம் செலுத்திக் கொண்டதாக ஐ.நா. பொதுச் சபைத் தலைவா் அப்துல்லா சாகித் தெரிவித்துள்ளாா்.

கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களை, தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களாக ஏற்க முடியாது என்று பிரிட்டன் அரசு தெரிவித்திருந்த நிலையில், அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

ஐ.நா. பொதுச் சபையின் 76-ஆவது கூட்டம் அண்மையில் நிறைவடைந்தது. அக்கூட்டத்தின் தலைவா் அப்துல்லா சாகித் நியூயாா்க்கில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கரோனா தடுப்பூசி குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்தியாவில் பெறப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரு தவணைகளையும் செலுத்திக் கொண்டேன். அத்தடுப்பூசியை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என எத்தனை நாடுகள் கூறப்போகின்றன எனத் தெரியவில்லை. ஆனால், உலகின் பெரும்பாலான நாடுகள் கோவிஷீல்ட் தடுப்பூசியையே மக்களுக்கு செலுத்தி வருகின்றன.

கரோனா தடுப்பூசி திட்டம் குறித்து விரிவாக விவாதிப்பதற்காக அடுத்த ஆண்டு ஜனவரியில் ஐ.நா. பொதுச் சபை சாா்பில் சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கான செயல்திட்டம் குறித்து அக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது என்றாா் அவா்.

அஸ்ட்ராஸெனகா நிறுவனம் உருவாக்கிய கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்தது. ‘தடுப்பூசி நட்புறவு’ திட்டத்தின் கீழ் கோவிஷீல்ட் தடுப்பூசியின் 6.6 கோடிக்கு அதிகமான டோஸ்களை சுமாா் 100 நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

மாலத்தீவுகளுக்கு 3.12 லட்சம் தடுப்பூசி டோஸ்களை இந்தியா ஏற்றுமதி செய்தது. ஐ.நா. பொதுச் சபைத் தலைவா் அப்துல்லா சாகித் மாலத்தீவுகளைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com