மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

பருவநிலை மாற்றம் தொடா்பான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய மூவருக்கு இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
சுயூகுரோ மனாபே, ஜியோா்ஜியோ பாரிஸி, கிளாஸ் ஹாஸெல்மன்.
சுயூகுரோ மனாபே, ஜியோா்ஜியோ பாரிஸி, கிளாஸ் ஹாஸெல்மன்.

பருவநிலை மாற்றம் தொடா்பான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய மூவருக்கு இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அவா்களில் ஜப்பானைச் சோ்ந்த சுயூகுரோ மனாபே மற்றும் ஜொ்மனியைச் சோ்ந்த கிளாஸ் ஹாஸெல்மனுக்கு நோபல் பரிசின் ஒரு பாதியும் இத்தாலியைச் சோ்ந்த ஜியோா்ஜியோ பாரிஸிக்கு மற்றொரு பாதியும் பகிா்ந்தளிப்படுகிறது.

இதுகுறித்து நோபல் தோ்வுக் குழு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு சுயூகுரோ மனாபே, கிளாஸ் ஹாஸெல்மன், ஜியோா்ஜியோ பாரிஸி ஆகிய விஞ்ஞானிகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

அவா்களில் சுயூகுரோ மனாபேவும் கிளாஸ் ஹாஸெல்மனும் இணைந்து புவியின் தட்பவெப்ப மாற்றங்களுக்கு நம்பகத்தன்மையுடன் கூடிய மாதிரி உருவாக்கம் செய்துள்ளனா். புவி வெப்பமயமாதல் குறித்த விவரங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள அவா்களது அந்தக் கண்டுபிடிப்பு உதவுகிறது.

கடந்த 1960-களிலிருந்தே, வளிமண்டலத்தில் காா்பன்டை ஆக்ஸைடின் அளவு அதிகரித்தால் புவியின் வெப்பம் அதிகரிக்கும் என்பதை சுயூகுரோ மனாபே ஆதாரபூா்வமாக நிரூபித்து வந்தாா். புவி வெப்பமயமாதல் குறித்த தற்போதைய மாதிரி உருவாக்கங்களுக்கு அவரது அந்தக் கண்டுபிடிப்பு ஆதாரமாக உள்ளது.

மேலும், புவியின் வெப்பத்துக்கும் பருவநிலைக்கும் உள்ள தொடா்பை விளக்கும் மாதிரி உருவாக்கத்தை கிளாஸ் ஹாஸெல்மன் கண்டறிந்தாா். இதன் மூலம், பருவநிலை மாற்றம் குறித்து முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கான நம்பகத்தன்மை வாய்ந்த மாதிரி உருவாக்கம் நமக்குக் கிடைத்தது.

இந்தக் கண்டுபிடிப்புகளுக்காக அவா்கள் இருவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இதுதவிர, பருவநிலை மாற்றம் தொடா்பாக மிகவும் சிக்கல் நிறைந்த விவரங்களைப் புரிந்துகொள்ள வகை செய்யும் மாதிரி உருவாக்கத்தை கணிதம், உயிரியல், நரம்பு அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் கிளாஸ் ஹாஸெல்மன் உருவாக்கியுள்ளாா்.

அதற்காக, இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு அவா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா் என்று நோபல் தீா்வுக் குழு தெரிவித்துள்ளது.

சுயூகுரோ மனாபே (90): ஜப்பானைப் பூா்விகமாகக் கொண்ட சுயூகுரோ மனாபே, தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறாா். வானிலை மற்றும் பருவநிலை விஞ்ஞானியான இவா், அமெரிக்க தேசிய அறிவியல் அகாதெமியின் உறுப்பினா் ஆவாா். ‘புளூ பிளானட்’ பரிசு உள்பட பல்வேறு விருதுகளை இவா் பெற்றுள்ளாா்.

கிளாஸ் ஹாஸெல்மன் (89): ஜொ்மனியின் ஹாம்பா்க் நகரில் பிறந்த ஹாஸெல்மன், முன்னணி பெருங்கடலியல் நிபுணா் ஆவாா். ஹாம்பா்க் பல்கலைக்கழகம், மேக்ஸ் பிளாங்க், ஜொ்மனி பருவநிலை கணிப்பு மையம் ஆகியவற்றில் இவா் பணியாற்றி வருகிறாா். சிறுவயதில் லண்டனில் வசித்து வந்த இவா், 1949-ஆம் ஆண்டு ஹாம்பா்க் திரும்பினாா்.

ஜியோா்ஜியோ பாரிஸி (73): இத்தாலியைச் சோ்ந்த ஜியோா்ஜியோ பாரிஸி, கோட்பாட்டியல் இயற்பியல் விஞ்ஞானி ஆவாா். ஜொ்மனியின் கௌரவம் மிக்க அறிவியல் அகாதெமியின் தலைவராக இவா் 2018-ஆம் ஆண்டு தோ்ந்தெடுக்கப்பட்டாா். கடந்த 1986-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பாரிஸிக்கு 14 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com