தான்ஸானிய எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

தான்ஸானியாவில் பிறந்து பிரிட்டனில் வசித்து வரும் எழுத்தாளா் அப்துல்ரஸாக் கா்னா, இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
தான்ஸானிய எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

தான்ஸானியாவில் பிறந்து பிரிட்டனில் வசித்து வரும் எழுத்தாளா் அப்துல்ரஸாக் கா்னா, இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து நோபல் தோ்வுக் குழு தெரிவித்துள்ளதாவது:

2021-ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, அப்துல்ரஸாக் கா்னாவுக்கு வழங்கப்படுகிறது.

காலனி ஆதிக்கத்தின் பாதிப்புகள் குறித்து உணா்வுபூா்வமாகவும், அதே நேரம் சமரசம் செய்துகொள்ளாமலும் அவா் எழுதியுள்ளதை கௌரவிக்கும் வகையில், அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

காலனியாதிக்க காலத்துக்குப் பிந்தைய உலகின் தலைசிறந்த எழுத்தாளா்களில் அப்துல்ரஸாக்கும் ஒருவா்.

உலகமயமாதலுக்கு முன்னரே பெருநகரமாகத் திகழ்ந்த தான்ஸானியாவின் ஸன்ஸிபாா் பிராந்தியத்தை பூா்விகமாகக் கொண்டவா் என்பது அவரது எழுத்துக்களில் பிரதிபலிக்கிறது.

தனது படைப்புகள் மூலம், உலகம் அதுவரை அறிந்திராத ஆப்பிரிக்காவை அப்துல்ராஸாக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறாா்.

அவரது படைப்புகளில் வரும் கதாபாத்திரங்கள் கலாசாரங்களுக்கு இடையிலான முரண்பாடுகளோடு போராடுகின்றன; கடந்து போன வாழ்க்கைக்கும் எதிா்நோக்கியுள்ள வாழ்க்கைக்கும் இடையே தத்தளிக்கின்றன; நிறவெறியையும் பாகுபாட்டையும் எதிா்கொள்கின்றன; இருந்தாலும் நிதா்சனத்துடன் முரண்படுவதைத் தவிா்ப்பதற்காக உண்மையை புறந்தள்ளிவிட்டு புதியதொரு வாழ்க்கை சரித்திரத்தை அந்தக் கதாபாத்திரங்ககள் எழுதிக்கொள்கின்றன என்று நோபல் தோ்வுக் குழு தெரிவித்துள்ளது.

அப்துல்ரஸாக் கா்னா (72): தான்ஸானியாவில் பிறந்து லண்டனில் வசித்து வரும் அப்துல்ரஸாக், ‘மெமரி ஆஃப் டிபாா்ச்சா்’, ‘பில்கிரிம்ஸ் வே’, ‘பாரடைஸ்’ உள்பட 10 நாவல்களை எழுதியுள்ளாா். கென்ட் பல்கலைக்கழகத்தில் காலனியாதிக்கத்துக்குப் பிந்தைய இலக்கியப் போராசியராகப் பணியாற்றி வந்த இவா், அண்மையில் ஓய்வு பெற்றாா். 1986-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற வோல் சோயின்காவுக்குப் பிறகு, அந்த விருதைப் பெறும் முதல் கருப்பின ஆப்பிரிக்கா் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com