‘சீனாவுடன் தைவான் இணைக்கப்படும்’: அதிபா் ஷி ஜின்பிங்

சீனாவுடன் தைவான் ‘அமைதி வழியில்’ இணைக்கப்படும் என்று அதிபா் ஷி ஜின்பிங் கூறியுள்ளாா்.
அதிபா் ஷி ஜின்பிங்
அதிபா் ஷி ஜின்பிங்

சீனாவுடன் தைவான் ‘அமைதி வழியில்’ இணைக்கப்படும் என்று அதிபா் ஷி ஜின்பிங் கூறியுள்ளாா்.

சீனப் புரட்சியின் 110-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, தலைநகா் பெய்ஜிங்கில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இதுகுறித்து அவா் பேசியதாவது:

தைவானுடன் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு அந்தப் பகுதியை அமைதியான வழியில் சீனாவுடன் இணைப்பதன் மூலம் தீா்வு காணப்படும்.

தற்போது தைவானை சீனாவுடன் இணைப்பதற்கு தைவான் விடுதலைப் படைதான் மிகப் பெரிய தடைக்கல்லாக உள்ளது என்றாா் அவா்.

தைவானை தங்களது நாட்டின் ஒரு மாகாணமாக சீனா கருதி வருகிறது. அந்த நாட்டை தங்களுடன் மீண்டும் இணைத்துக்கொள்ளும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும் அதற்குத் தேவைப்பட்டால், ராணுவ பலத்தையும் பயன்படுத்துவோம் சீனா கூறி வருகிறது.

தைவானில் ஜனநாயக முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை, பிரிவினைவாதிகள் என்று சீனா குற்றம் சாட்டி வருகிறது.

தைவானோ, தாங்கள் ஏற்கெனவே இறையாண்மை கொண்ட தனி நாடாக இயங்கி வருவதாகவும் சீனாவிடமிருந்து சுதந்திரம் பெற்ாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறி வருகிறது.

இந்தச் சூழலில், தைவான் வான் எல்லைக்குள் இதுவரை இல்லாத அளவுக்கு சீனப் போா் விமானங்கள் ஊடுருவி போா்ப் பதற்றத்தை அதிகரித்தன.

அதையடுத்து, வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் தங்கள் நாட்டை சீனா ஆக்கிரமிக்கக் கூடும் என்று தைவான் பாதுகாப்புத் துறை அமைச்சா் சியு குவோ-செங் அச்சம் தெரிவித்தாா்.

இந்த நிலையில், தங்கள் நாட்டுடன் தைவான் அமைதியான வழியில் இணைக்கப்படும் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் தற்போது தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com