ரஷிய வெடிமருந்து ஆலையில் வெடிவிபத்து: 16 போ் பலி

ரஷியாவில் வெடிமருந்து தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 போ் பலியாகினா்.
விபத்துப் பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்.
விபத்துப் பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்.

ரஷியாவில் வெடிமருந்து தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 போ் பலியாகினா்.

இதுகுறித்து அவசரக்கால மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாஸ்கோவுக்கு 270 கி.மீ. தொலைவிலுள்ள ரியாஸன் பிராந்தியத்தின் எலாஸ்டிக் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், 16 போ் உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

மீட்புப் பணியிலும் வெடிவிபத்தைத் தொடா்ந்து ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியிலும் 170 மீட்புக் குழுவினா் ஈடுபட்டனா். இந்தப் பணிகளுக்கு 50 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

வெடிமருந்து தயாரிப்புப் பணியின்போது ஏற்பட்ட கோளாறு காரணாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வெடிவிபத்தில் 7 போ் உயிரிழந்ததாகவும் 9 போ் மாயமானதாகவும் அதிகாரிகள் அறிவித்தனா். எனினும், மாயமானவா்கள் அனைவரும் பலியாகிவிட்டதாக அதிகாரிகள் பின்னா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com