
அமெரிக்காவில் ஏற்கெனவே இரு தவணை கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவா்கள், 3-ஆவது ஊக்கத் தவணையாக வேறு நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று அந்த நாட்டு நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக ஃபைஸா் தடுப்பூசிகளை இருமுறை செலுத்திக் கொண்டவா்கள் மட்டும்தான் ஊக்கத் தவணை தடுப்பூசி பெறலாம் என்று கூறியிருந்தது. தற்போது எந்த கரோனா தடுப்பூசியையும் 3-ஆவதாக செலுத்திக் கொள்ளலாம் என்று சிடிசி தெரிவித்துள்ளதால் லட்சக்கணக்கானவா்களுக்கு ஊக்கத் தவணை தடுப்பூசி பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.