'2025 வரை குறைவாகச் சாப்பிடுங்கள்' - வடகொரிய அதிபரின் அறிவுறுத்தலால் சர்ச்சை!

உணவுப் பஞ்சத்தினால் 2025 ஆம் ஆண்டு வரை குறைவாகச் சாப்பிட மக்களுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவுறுத்தியுள்ளார். 
வட கொரிய அதிபர்  கிம் ஜாங் உன்.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்.

உணவுப் பஞ்சத்தினால் 2025 ஆம் ஆண்டு வரை குறைவாகச் சாப்பிட மக்களுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவுறுத்தியுள்ளார். 

வடகொரியாவில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்ததாலும் தற்போது விவசாயத் துறை போதுமான உற்பத்தியை நிறைவேற்றத் தவறியதாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும் கரோனா பரவல் காரணமாக அண்டை நாட்டின் எல்லைகளையும் வடகொரியா மூடியுள்ளது. இதனால் மக்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். உணவுப் பொருள்களுக்கு பெரும் தேவை இருப்பதால் அவற்றின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது. 

இந்நிலையில், உணவுப் பஞ்சத்தினால் மக்கள் குறைவாக சாப்பிட வேண்டும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவுறுத்தியுள்ளார். 2025 ஆம் ஆண்டு வரை உணவுப் பஞ்சம் இருக்கும் என்றும் அரசுத் தரப்பு கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதுபோல சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான வர்த்தகமும் 2025 வரை மீண்டும் தொடங்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. எனினும் இந்த உணவுப் பஞ்சத்தை அரசு சமாளித்து மீண்டு வரும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இதையடுத்து, வடகொரிய அதிபரின் இந்தக் கருத்துக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com