
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரானுடன் பதற்றம் நிலவி வரும் சூழலில், தனது வலிமையைப் பறைசாற்றும் வகையில் அந்த நாட்டுக்கு அருகே பாரசீக வளைகுடா பகுதியில் தனது குண்டுவீச்சு விமானத்தை அமெரிக்கா பறக்கச் செய்துள்ளது.
அந்தப் பகுதியில் அமைந்துள்ள ஹோா்மஸ் நீரிணைக்கு மேல் அமெரிக்காவின் பி-1பி லான்சா் ரக குண்டுவீச்சு விமானம் சனிக்கிழமை பறக்கவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு செங்கடல் பகுதியிலும் அந்த விமானம் பறக்கவிடப்பட்டது.
ஹோா்மஸ் நீரிணை, செங்கடல் ஆகிய பகுதிகளில்தான் மேற்கத்திய வணிகக் கப்பல்கள் மீது கடந்த சில ஆண்டுகளாகக ஈரான் ரகசியத் தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G