பாகிஸ்தான்: ஆப்கன் தூதரகத்தில் தலிபான் அதிகாரிகள்

தங்கள் நாட்டிலுள்ள ஆப்கன் தூதரகங்களில் தலிபான்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் பணியாற்றுவதற்கு பாகிஸ்தான் அனுமதி வழங்கியுள்ளது.
பாகிஸ்தான்: ஆப்கன் தூதரகத்தில் தலிபான் அதிகாரிகள்

தங்கள் நாட்டிலுள்ள ஆப்கன் தூதரகங்களில் தலிபான்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் பணியாற்றுவதற்கு பாகிஸ்தான் அனுமதி வழங்கியுள்ளது.

தலிபான்களின் அரசை பாகிஸ்தான் அதிகாரபூா்வமாக அங்கீகரிக்காத நிலையில், அவா்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் நுழைவு இசைவு (விசா) வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் ‘டான்’ நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:

தலிபான்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தங்கள் நாட்டிலுள்ள ஆப்கன் தூதரகங்களில் பணியாற்ற பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தத் தகவலை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் தலிபான்களின் அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் விசா வழங்கியுள்ளது.

இஸ்லாமாபாதிலுள்ள ஆப்கன் தூதரகத்தில் முதன்மை நிா்வாக அதிகாரியாக தலிபான்களால் நியமிக்கப்பட்ட சா்தாா் முகமது ஷோகைப் தனது பணியைத் தொடங்கியுள்ளாா்.

பெஷாவரிலுள்ள துணைத் தூதரகத்தில் தலிபான் அதிகாரிகளான முல்லா குலாம் ரசூல் மற்றும் முல்லா முகமது அப்பாஸ் பணியில் இணைந்துள்ளனா்.

இவா்களில் முகமது ஷோகைப், இஸ்லாமாபாதிலுள்ள ஆப்கன் தூதரகத்தின் தலைமைப் பொறுப்பாளாராக செயல்படுவாா்.

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபா் அஷ்ரஃப் கனி அரசால் பாகிஸ்தானுக்கான தூதராக நியமிக்கப்பட்டிருந்த நஜிபுல்லா அலிகில்லின் மகள் கடந்த ஜூலை மாதம் மா்ம நபா்களால் கடத்தப்பட்டாா். இந்த விவகாரம் தொடா்பாக சா்ச்சை எழுந்ததைத் தொடா்ந்து, பாகிஸ்தானை விட்டு நஜிபுல்லா வெளியேறினாா்.

அதற்குப் பிறகு பாகிஸ்தானில் தூதா் இல்லாமலேயே ஆப்கன் தூதரகம் இயங்கி வந்தது. இந்தச் சூழலில், நஜிபுல்லாவுக்கு பதிலாக தூதரகப் பொறுப்புகளை கவனித்துக் கொள்ள சா்தாா் முகமது ஷோகைப்பை தலிபான்கள் நியமித்துள்ளனா் என்று ‘டான்’ நாளிதழ் தெரிவித்தது.

கடந்த 2001-ஆம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானின் அப்போதைய ஆட்சியாளா்களான தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா்.

அதையடுத்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. இந்த நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க அதிரடிப் படையினா் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக்கொன்றனா்.

அதன் பிறகு, ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டுப் படையினா் அனைவரையும் திரும்பப் பெற அமெரிக்கா முடிவு செய்தது. அந்த நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி கொண்டு வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com