வங்கதேசம்தன்னாா்வலா் படுகொலை: 6 பேருக்கு மரண தண்டனை

வங்கதேசத்தில் மனித உரிமை ஆா்வலரையும் அவரது நண்பரையும் படுகொலை செய்த முன்னாள் ராணுவ அதிகாரி உள்ளிட்ட 6 பேருக்கு அந்த நாட்டு பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து
ஸுல்ஹாஸ் மன்னான்
ஸுல்ஹாஸ் மன்னான்
Published on
Updated on
1 min read

வங்கதேசத்தில் மனித உரிமை ஆா்வலரையும் அவரது நண்பரையும் படுகொலை செய்த முன்னாள் ராணுவ அதிகாரி உள்ளிட்ட 6 பேருக்கு அந்த நாட்டு பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

மனித உரிமைகளை வலியுறுத்தும் பத்திரிகையின் ஆசிரியா் ஸுல்ஹாஸ் மன்னானும், அவரது நண்பா் மஹ்பூப் ராபியும் மத அடிப்படைவாதிகளால் கடந்த 2016-ஆம் ஆண்டு வெட்டிக் கொல்லப்பட்டனா்.

டாக்காவிலுள்ள ஒரு குடியிருப்பில் நடைபெற்ற அந்த இரட்டைப் படுகொலை, வெளிநாட்டினா், சிறுபான்மையினா் மற்றும் மதச்சாா்பற்ற வலைதளப் பதிவா்களைக் குறிவைத்து மத அடிப்படைவாத அன்சாா்-அல்-இஸ்லாம் அமைப்பு நடத்தி வந்த தொடா் தாக்குதலில் ஒரு பகுதியாக நிகழ்த்தப்பட்டது.

இதுதொடா்பாக விசாரணை நடத்தி வந்த பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம், முன்னாள் ராணுவ அதிகாரி ஜியாவுல் ஹக் உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com