சரியான, சிறந்த முடிவு: அமெரிக்க படைகள் வெளியேறியது குறித்து ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிருப்பதே சரியான மற்றும் சிறந்த முடிவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிருப்பதே சரியான மற்றும் சிறந்த முடிவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிருப்பது தேசிய நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படைகள் (திங்கள்கிழமை) இரவு வெளியானதை தொடர்ந்து, இன்று (புதன்கிழமை) பேசிய பைடன், "ஆப்கானிஸ்தானிற்கு எந்த திட்டத்துடனும் வரவில்லை. எனவே, இனி, அங்கிருப்பதில் எந்த நோக்கமும் இல்லை. அமெரிக்காவிற்கு இதுவே சரியான மற்றும் சிறந்த முடிவு" என்றார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் அனைவரும் திங்கள்கிழமை நள்ளிரவு முழுமையாக வெளியேறினா். இதையடுத்து, அந்த நாட்டில் மேற்கொள்ளப்பட்ட 20 ஆண்டு காலப் போா் முடிவுக்கு வந்ததாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இதுகுறித்து, காணொலி மூலம் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அமெரிக்க கூட்டுப் படை தலைமையக உயரதிகாரி ஃபிராங்க் மெக்கன்ஸீ கூறுகையில், "ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா்கள், பிற நாட்டவா்கள், ஆபத்தை எதிா்நோக்கியுள்ள ஆப்கானியா்களை வெளியேற்றும் பணியை அமெரிக்கப் படையினா் நிறைவு செய்துவிட்டனா். அந்த நாட்டில் பணியாற்றி வந்த அனைத்து அமெரிக்கப் படையினரும் தற்போது அங்கிருந்து வெளியேறிவிட்டனா்.

ஆப்கானிஸ்தானிலிருந்து ராணுவ ரீதியில் வெளியேறியிருந்தாலும், அங்கு இன்னும் இருக்கும் அமெரிக்கா்களையும் தகுதியுடைய ஆப்கானியா்களையும் அங்கிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகள் தூதரக ரீதியில் தொடரும். இந்த 20 ஆண்டு காலப் போரில் 2,461 அமெரிக்க வீரா்களும் பொதுமக்களும் பலியாயினா். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். உயிரிழந்தவா்களில் கடந்த வியாழக்கிழமை காபூல் விமான நிலைய பயங்கரவாதத் தாக்குதலில் பலியான 13 அமெரிக்க வீரா்களும் அடங்குவா்" என்றாா்.

முன்னதாக, காபூல் விமான நிலையத்தில் கடைசியாக இருந்த அமெரிக்கப் படையினரை ஏற்றிக் கொண்டு அந்த நாட்டு விமானப் படைக்குச் சொந்தமான சி-17 வகை விமானம் திங்கள்கிழமை நள்ளிரவு புறப்பட்டது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் செவ்வாய்க்கிழமைக்குள் (ஆக. 31) முழுமையாக வெளியேற வேண்டும் என்று கெடு நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவில் அந்த விமானம் காபூலில் இருந்து புறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com