நியூசிலாந்தில் வழக்கத்திற்கு மாறாக குளிர்காலத்தில் அதிகரித்த வெப்பநிலை

காலநிலை மாற்றம் காரணமாக நியூசிலாந்து நாடானது வெப்பமான குளிர்கால பருவத்தை பதிவு செய்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன.

காலநிலை மாற்றம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் வெப்ப அலைகளின் தாக்கம், பனிப்பாறைகள் உருகுதல், திடீர் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு  இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நியூசிலாந்து நாட்டில் வழக்கத்திற்கு மாறாக குளிர்காலத்தில் அதிகப்படியான வெப்பம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய நீர் மற்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் - ஆகஸ்ட் மாத காலத்தில் பதிவான சராசரி வெப்பநிலையானது வழக்கத்தை விட 1.32 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பதிவான முதல் 10 குளிர்கால வெப்பநிலைகளில் 2000ஆம் ஆண்டிலிருந்து மட்டும் 7 அதிக வெப்பநிலைகள் பதிவாகியுள்ளதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் காலநிலை அவசரநிலை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com