பஞ்சஷேர் மாகாணத்தையும் கைப்பற்றிவிட்டோம்: தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் பஞ்சஷேர் மாகாணத்தையும் கைப்பற்றியதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். 
பஞ்சஷேர் மாகாணத்தையும் கைப்பற்றிவிட்டோம்: தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் பஞ்சஷேர் மாகாணத்தையும் கைப்பற்றியதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அந்நாட்டை தலிபான்கள் கைப்பற்றி ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 

தலைநகர் காபூல் உள்பட அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றிய தலிபான்களுக்கு அடிபணியாமல் இருந்தது பஞ்சஷேர் மாகாணம். துணை அதிபர் அமருல்லா சலே மற்றும் வடக்கு கூட்டணித் தலைவர் அகமது மசூது தலைமையில் பஞ்சஷேர் மாகாண மக்கள், தஞ்சம் புகுந்த ஆப்கன் படைகள் தலிபான்களுக்கு எதிராக போரிட்டு வந்தனர். 

இந்நிலையில், பஞ்சஷோ் பகுதியை தலிபான்கள் முற்றுகையிட்டு, பொருளாதாரப் போக்குவரத்து மற்றும் தகவல்தொடா்பைத் துண்டித்தனர். இதனால் பஞ்சஷோ் மாகாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

ஆப்கானிஸ்தானின் பஞ்சஷோ் பள்ளத்தாக்கில் தலிபான்களால் பேரழிவு ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஐ.நா.விடம் அந்த நாட்டின் முன்னாள் துணை அதிபா் அமருல்லா சலே வேண்டுகோள் விடுத்தார்.

இந்த சூழ்நிலையில் தலிபான்கள் வெகுவிரைவாக முன்னேறியதாகவும் வடக்குக் கூட்டணி பகுதியினர் தலிபான்களிடம் அடிபணிந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. பஞ்சஷேர் மாகாண ஆளுநரின் அலுவலகம் முன்பு தலிபான்கள் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் இன்று வெளியாகின. 

இதனிடையே, ஆப்கானிஸ்தானில் பஞ்சஷேர் மாகாணத்தையும் கைப்பற்றியதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். 

ஆனால், தங்கள் படைகள் இன்னும் தலிபான்களை எதிர்த்து போரிட்டுக்கொண்டு இருப்பதாக அகமது மசூது தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com