கர்ப்பிணியான ஆப்கன் பெண் காவலரை குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக் கொன்ற தலிபான்

ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில், 6 மாத கர்ப்பிணியாக இருந்த ஆப்கன் பெண் காவலரை தாலிபான்கள் சுட்டுக் கொன்றதாக ஆப்கானில் இருக்கும் செய்தியாளர் ஒருவர் தனது சுட்டுரையில் வெளியிட்டுள்ளார்.
கர்ப்பிணியான ஆப்கன் பெண் காவலரை குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக் கொன்ற தலிபான்
கர்ப்பிணியான ஆப்கன் பெண் காவலரை குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக் கொன்ற தலிபான்


காபூல்: ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில், 6 மாத கர்ப்பிணியாக இருந்த ஆப்கன் பெண் காவலரை தாலிபான்கள் சுட்டுக் கொன்றதாக ஆப்கானில் இருக்கும் செய்தியாளர் ஒருவர் தனது சுட்டுரையில் வெளியிட்டுள்ளார்.

நிகாரா என்ற அந்த பெண் காவலர், ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரது கணவர் மற்றும் குழந்தைகள் முன்னிலையில், தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக அந்த சுட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலை மற்றும் உடலை மறைக்கும் ஆடைகளை அணியாமல் இருக்கும் பெண்களை தலிபான்கள் அடித்துத் துன்புறுத்துவார்கள் என்ற அச்சத்தில், ஏராளமான பெண்கள், சந்தைகளில், தலை மற்றும் உடலை மறைக்கும் பர்காஸ் உள்ளிட்ட ஆடைகளை வாங்கக் குவிந்துள்ளனர். இதே நிலை கடந்த 1990களில் காணப்பட்டதாக ஸ்புட்னிக் செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

தலிபான்கள் அமைக்கும் ஆட்சியில், பெண்களும் பங்கேற்க வேண்டும் என்று ஏராளமான பெண்கள் ஹெராத்தில் போராட்டம் நடத்தியிருந்தனர்.

நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெண்களை வெளியேற்ற வேண்டாம் என்பதை வலியுறுத்தும் பேனர்களையும் அவர்கள் வைத்திருந்ததாகவும் அங்கிருந்து வெளியான செய்திகள் தெரிவித்தன.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானை கைப்பற்றியிருக்கும் தலிபான்களால், பெண்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாவார்கள் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்திருக்கும் நிலையில், தலிபான்களின் சிந்தனைகளை எண்ணி, ஆப்கன் பெண்கள் கடும் அச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com