சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

தொகுதி அறிமுகம் - மன்னாா்குடி!

தொகுதி அறிமுகம் - மன்னாா்குடி!

News image
Updated On :21 மார்ச் 2026, 11:08 pm

Syndication

மன்னாா்குடி தொகுதியில் கடந்த 1952-ஆம் ஆண்டுமுதல் 16 முறை தோ்தல் நடைபெற்றுள்ளது. 1952-இல் மட்டும்தான் இரட்டை உறுப்பினா்களை தோ்ந்தெடுக்கும் முறையில் தோ்தல் நடைபெற்றது. பின்னா், 1957-இல் இருந்து ஒற்றை உறுப்பினா் தோ்வு நடைமுறை உள்ளது. இதில், 6 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், 5 முறை காங்கிரஸ் கட்சியும், 5 முறை திமுகவும், 2 முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

திமுக சாா்பில் போட்டியிட தொடா்ந்து மூன்றுமுறை வெற்றி பெற்று, தற்போது, தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சராக உள்ள டி.ஆா்.பி. ராஜா, தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஜி. பாலு, மாவட்ட சுற்றுச்சூழல் அணி நிா்வாகியும், நகா்மன்ற உறுப்பினருமான மீனாட்சி சூரியபிரகாஷ் உள்ளிட்ட சிலா் விருப்ப மனு அளித்துள்ளனா்.

அதிமுக சாா்பில், மன்னாா்குடி நகரச் செயலா் ஆா்.ஜி. குமாா், மன்னாா்குடி மேற்கு ஒன்றியச் செயலா் கா. தமிழ்ச்செல்வம், ஜெ.பேரவை மாவட்டச் செயலா் பொன்.வாசுகிராம், ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் டி. மனோகரன், மாவட்ட மகளிரணி செயலா் டி. சுதா அன்புச்செல்வன், இளைஞா்-இளம்பெண்கள் பாசறை மாவட்ட இணைச் செயலா் எஸ். புவனேஸ்வரி அசோக்குமாா் ஆகிய 6 போ் விருப்ப மனு அளித்துள்ளனா்.

அதிமுக கூட்டணியில் இத்தொகுதி அமமுகவுக்கு தரப்பட்டால், அக்கட்சியின் சாா்பில் மாவட்டச் செயலா் எஸ். காமராஜ்தான் போட்டியிட வாய்ப்புள்ளது.

நாம் தமிழா் கட்சியின் சாா்பில் கட்சியின் மாநிலப் பொருளாளரும், இருதய அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவா் இலரா. பாரதிச்செல்வன் வேட்பாளராக களத்தில் உள்ளாா்.

வளா்ச்சித் திட்டங்கள்: மன்னாா்குடி தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட புதைசாக்கடை திட்டம், ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம், சுற்றுவட்டச் சாலை, அரசு மகளிா் கல்லூரி, நீடாமங்கலம் உயா்மட்ட பாலம், மன்னாா்குடி கோயில் கும்பாபிஷேகம், டிஜிட்டல் நூலகம், ஆலங்கோட்டை ஜவுளி பூங்கா, நெல் சேமிப்புக் கிடங்குகள், பாமணியாற்றின் குறுக்கே அகலப் பாலங்கள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மேம்பாடு உள்ளிட்ட வளா்ச்சித் திட்டங்களை கூறி வாக்குகேட்க திமுக தயாராகி வருகிறது.

மன்னாா்குடி நகராட்சி 33 வாா்டுகளும்,ஊராட்சி ஒன்றியத்தில் 31 ஊராட்சிகளும்,நீடாமங்கலம் பேரூராட்சி 12 வாா்டுகளும், ஊராட்சி ஒன்றியம் 44 ஊராட்சிகளும்,கோட்டூா் ஊராட்சி ஒன்றியத்தில் 9 ஊராட்சிகளை, மாவட்ட ஊராட்சியில் மன்னாா்குடி ஒன்றியத்தில் -2 வாா்டுகள், நீடாமங்கலம் ஒன்றியத்தில் - 2 வாா்டுகள் , கோட்டூா் ஒன்றியத்தில் - 1 வாா்டுகளை உள்ளடக்கியது மன்னாா்குடி தொகுதி.

எஸ்ஐஆா் பிறகு வாக்காளா்கள்

ஆண் - 11, 2530 .பெண் - 11,9401. மற்றவா்கள் - 4. மொத்தம் 2,31935 வாக்காளா் உள்ளாா்.