போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் குறித்து தலிபான்கள் சர்ச்சை கருத்து

அமைச்சரவையில் பெண்களுக்கு இடமளிக்காதது குறித்த தலிபான் செய்தித் தொடர்பாளர் சையத் ஜெக்ருல்லா ஹாஷிமியின் கருத்து சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கடந்த கால ஆட்சி போல் அல்லாமல், அனைவருக்குமான அரசாக செயல்படும், பெண்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என தலிபான்கள் உறுதி அளித்திருந்தனர். ஆனால், அவர்கள் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்த கருத்து இதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

அமைச்சரவையில் பெண்களுக்கு இடமளிக்காதது குறித்த தலிபான் செய்தித் தொடர்பாளர் சையத் ஜெக்ருல்லா ஹாஷிமியின் கருத்து சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

"பெண்களால் அமைச்சராக முடியாது. சுமக்க முடியாததை அவர்களின் கழுத்தில் ஏற்றுவது போல் இருக்கும். அமைச்சரவையில் பெண்களுக்கு இடமளிப்பது அவசியமற்றது. அவர்கள் குழந்தைகளை பெற்றெடுக்க மட்டுமே வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பெண்களுக்கு பிரதிநிதிகளாக இருக்க முடியாது" என டோலோ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சையத் ஜெக்ருல்லா ஹாஷிமி தெரிவித்துள்ளார்.

ஆனால், சமூகத்தில் 50 சதிவிகித்தினர் பெண்களாக உள்ளனரே என நேர்காணல் எடுத்தவர் எழுப்பிய கேள்விக்கு, "நாங்கள் அவர்களை பாதியாகவே கருதவில்லை. இந்த பாதி என்ற கருத்து தவறாக திரித்துக் கூறப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இடம் கொடுத்துவிட்டால் மட்டும் போதுமா? அதற்கு மேல் செய்ய வேண்டாமா? அவர்களின் உரிமைகளை பறிப்பது பிரச்னை இல்லையா? கடந்த 20 ஆண்டுகளாக, ஊடகம், அமெரிக்கா, பொம்மை அரசாங்கம் ஆகியவை சொன்னது செய்தது யாவும் பாலியல் தொழிலே" என்றார்.

அனைத்து பெண்களையும் பாலியல் தொழில் செய்பவர்களாக குற்றம்சாட்டமுடியாதே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "அனைத்து பெண்களையும் சொல்லவில்லை. தெருக்களில் போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பெண்களுக்கு பிரிதிநிதிகள் இல்லை" என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com