கருத்துக்கணிப்புகளில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ள ஜஸ்டின் ட்ரூடோ; தேர்தலை முன்கூட்டியே அறிவித்தது சரியா? தவறா?

கரோனா பெருந்தொற்று சிறப்பாக கையாண்டதால், மக்கள் தனக்கு ஆதரவு அளி்த்து பெரும்பான்மையான அரசை அமைக்க உதவுவார்கள் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நம்பிக்கை வைத்திருந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வரும் செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெறவுள்ள முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட தேர்தலில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வியை தழுவுவார் என கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், கரோனாவுக்கு எதிரான போரை எதிர்க்கட்சி வலிவிழக்க செய்யும் என ட்ரூடோ குற்றம்சாட்டியுள்ளார். 

பெரும்பான்மை இல்லாத நிலையில் புதிய சட்டங்களை நிறைவேற்ற ட்ரூடோவின் லிபரல் கட்சி எதிர்க்கட்சிகளை நம்பியே இருந்தது. இதனிடையே, கரோனாவை சிறப்பாக கையாண்டதால், மக்கள் தனக்கு ஆதரவு அளி்த்து பெரும்பான்மையான அரசை அமைக்க உதவுவார்கள் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நம்பிக்கை வைத்திருந்தார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக பிரதமராக உள்ள ட்ரூடோ, கரோனா நான்காம் ஆலையின்போது தேர்தலை நடத்துவதால் மக்கள் அவர் மீது அதிருப்தியில் உள்ளதாக கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் எரின் ஓ டூல் கருத்துக்கணிப்புகளில் முன்னிலை வகித்துவருகிறார்.

தேர்தலை முன்கூட்டியே நடத்த முடிவெடுத்ததில் வருத்தம் உள்ளதா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "இல்லவே இல்லை. நாட்டை எப்படி முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதில் அனைத்து கட்சிகளுக்கும் வேறுபாடு உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது" என்றார். தேர்தலை முன்கூட்டியே அறிவித்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் தொடர் விமரிசனத்தை மேற்கொண்டுவருகின்றனர்.

இதனால், கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதில் ட்ரூடோவுக்கு சிரமம் உள்ளது. அதேபோல், தடுப்பூசி விவகாரத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. தடுப்பூசி போட்டு கொள்வதை கட்டாயப்படுத்தக் கூடாது என டூலும், கட்டாயமாக செலுத்தி கொள்ள வேண்டும் ட்ரூடோவும் தெரிவித்துள்ளனர். இது, தேர்தலில் எந்தளவுக்கு எதிரொலிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com