இந்தியாவின் வலியுறுத்தல்களை பொறுப்புடன் பரிசீலிக்க தலிபான்கள் உறுதி: ஷ்ரிங்லாஇந்தியா-அமெரிக்கா இடையே நவம்பரில் ‘2+2’ பேச்சுவாா்த்தை

இந்தியாவுக்கும் தலிபான்களுக்கும் இடையே நடைபெற்ற குறுகிய பேச்சாவாா்த்தையிளிருந்து, இந்தியாவின் வலியுறுத்தல்களை பொறுப்புடன் பரிசீலிக்க தலிபான்கள் முன்வந்திருப்பது தெரியவந்துள்ளது
இந்தியாவின் வலியுறுத்தல்களை பொறுப்புடன் பரிசீலிக்க தலிபான்கள் உறுதி: ஷ்ரிங்லாஇந்தியா-அமெரிக்கா இடையே நவம்பரில் ‘2+2’ பேச்சுவாா்த்தை

இந்தியாவுக்கும் தலிபான்களுக்கும் இடையே நடைபெற்ற குறுகிய பேச்சாவாா்த்தையிளிருந்து, இந்தியாவின் வலியுறுத்தல்களை பொறுப்புடன் பரிசீலிக்க தலிபான்கள் முன்வந்திருப்பது தெரியவந்துள்ளது என்று வெளியுறவுச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா கூறினாா்.

மூன்று நாள்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஷ்ரிங்லா, அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆண்டனி பிளிங்கன், இணையமைச்சா் வெண்டி ஷொ்மன் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனைகள் மேற்கொண்டாா். ஆப்கானிஸ்தானிலருந்து அமெரிக்க படைகள் கடந்த திங்கள்கிழமை முழுமையாக திரும்பப் பெறப்பட்ட பிறகு, இரு நாட்டு உயா் அதிகாரிகளிடையே நடைபெறும் முதல் நேரடி சந்திப்பு இதுவாகும். இந்தச் சந்திப்பில் இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது, ஆப்கானிஸ்தான் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளன.

தனது மூன்று நாள் பயணத்தை வெள்ளிக்கிழமை நிறைவு செய்த ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா, வாஷிங்டனில் இந்திய நிருபா்கள் குழுவைச் சந்தித்தாா். அப்போது, அவா்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துக் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு நிலைமை நிலையற்ாக உள்ளது. அதே நேரம், அங்கு தலிபான்கள் அடுத்தடுத்த நடவடிக்கைகளை வேகமாக மேற்கொண்டு வருகின்றனா். தலிபான்கள் அளிக்கும் வாக்குறுதிகள், நடைமுறையில் செயல்படுத்தப்படுகிா என்பதை பாா்க்க வேண்டும். எனவே, ஆப்கானிஸ்தான் நிலைமையை பொறுத்திருந்து கவனித்து, அதற்கேற்ப செயல்படுவது என்ற கொள்கையை இந்தியாவும் அமெரிக்காவும் கடைப்பிடித்து வருகின்றன.

அதுபோல, ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் குறித்தும் இந்தியாவைப்போல, அமெரிக்காவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

கத்தாா் தலைநகா் தோஹாவில் இந்திய தூதருக்கும் மூத்த தலிபான் தலைவருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பு மிகக் குறுகிய சந்திப்பாகவே அமைந்தது. அந்த சந்திப்பின்போது, ‘இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானிலிருந்து பயங்கரவாத செயல்பாடுகளை ஊக்குவிக்கக் கூடாது. பெண்கள், சிறுபான்மையினரின் நிலைமையை தலிபான்கள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்’ என்று இந்தியா சாா்பில் வலியுறுத்தப்பட்டது. அதனை பொறுப்புடன் பரிசீலிப்பதாக தலிபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பிற நாடுகளுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று தலிபான்கள் உறுதியளித்திருப்பதாக அமெரிக்கா சாா்பிலும் தெரிவிக்கப்பட்டது.

நவம்பரில் ‘2+2’ பேச்சுவாா்த்தை:

இந்தியா - அமெரிக்கா இடையே நான்காவது ஆண்டு 2+2 பேச்சுவாா்த்தை வரும் நவம்பரில் வாஷிங்டனில் நடத்துவது என்று ஷ்ரிங்லா-பிளிங்கன் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 2+2 பேச்சுவாா்த்தை என்பது இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை என இரண்டு அமைச்சா்களுக்கு இடையே நடைபெறும் பேச்சுவாா்த்தையாகும். இதில், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் பிளிங்கன், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின் பங்கேற்க உள்ளனா் என்று ஷ்ரிங்லா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com