
அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சியில் நடப்பாண்டு பல்வேறு அரசியல் அர்த்தம் வாய்ந்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சி உலகப்புகழ் பெற்றது. இந்த ஃபேஷன் நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடிகைகள், நடிகர்கள், மாடல்கள் என பிரபலம் வாய்ந்த பலரும் கலந்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில் நடப்பாண்டு நடைபெற்றுவரும் மெட்காலா ஃபேஷன் நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் அர்த்தம் பொருந்திய உடைகளை உடுத்தி வந்த மாடல்களால் நிகழ்ச்சியில் பரபரப்பு கூடியுள்ளது.
நியூயார்க்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல தனியார் நிகழ்ச்சி பிரபலமான கிம் கர்தாஷியனின் உடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கருப்பின மக்கள் மீதான வன்முறையை எதிர்த்தும், கருப்பின மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும் கிம் கர்தாஷியன் தலை முதல் முழு உடலையும் மறைக்கும் விதமாக கருப்பு உடை அணிந்து கலந்து கொண்டார்.
இதையும் படிக்க | சீனா: மேலும் ஒரு நகரில் டெல்டா கரோனா அலை
அதேபோல் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான அலெக்சாண்ட்ரியா ஒகாசியோ கார்டஸ் அணிந்து வந்த ஆடையும் பேசுபொருளாகியுள்ளது.
அவர் அணிந்து வந்த வெள்ளை நிற ஆடையின் பின்புறம் பொறிக்கப்பட்டிருந்த செல்வந்தர்களுக்கு வரி விதிப்பீர் என்கிற வாசகம் தற்போது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. உலகின் முக்கிய கவனம் பெற்ற பேஷன் நிகழ்ச்சி தற்போது அரசியல் பரபரப்பைக் கிளப்பும் இடமாக மாறியுள்ளது அனைவரையும் ஈர்த்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.