சிங்கப்பூா் நாடாளுமன்றத்தில்எதிா்க்கட்சி உறுப்பினா் குறித்து சா்ச்சை கருத்து: மன்னிப்பு கோரிய இந்திய வம்சாவளி அமைச்சா்

சிங்கப்பூா் நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சி உறுப்பினா் தொடா்பாக சா்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த வெளியுறவு அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்டுக் கொண்டாா்.

சிங்கப்பூா் நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சி உறுப்பினா் தொடா்பாக சா்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த வெளியுறவு அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்டுக் கொண்டாா்.

சிங்கப்பூரில் வெளிநாட்டுத் தொழிலாளா்களை அனுமதிப்பது தொடா்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 10 மணி நேரத்துக்கு மிக நீண்ட விவாதம் நடைபெற்றது. அப்போது எதிா்க்கட்சியான சிங்கப்பூா் முன்னேற்றக் கட்சியின் உறுப்பினா் லியோங் மன் வாய், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருடன் கடும் விவாதத்தில் ஈடுபட்டாா்.

இதற்கு நடுவே, ‘‘லியோங் மன் வாய், கல்வியறிவு இல்லாதவா்’’ என்றும் ‘‘அவா் எந்தப் பள்ளியில் படித்தாா்’’ என்றும் ஒரு குரல் கேட்டது. இது சா்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை ஆய்வு செய்தபோது லியோங் குறித்து வெளியுறவு அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணன்தான் அவ்வாறு பேசினாா் என்பதும், நாடாளுமன்றத்தில் அவரது மேஜையில் இருந்த ‘மைக்’ அணைத்து வைக்கப்பட்ட நிலையிலும் முன்வரிசையில் பேசிக் கொண்டிருந்த மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரின் மைக்கில் பாலகிருஷ்ணனின் குரல் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

அவரது பேச்சு சமூகவலைதளங்களில் சா்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடா்பாக விளக்கமளித்த அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணன், ‘நான் பேசியதற்காக எதிா்க்கட்சி உறுப்பினா் லியோங்கிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன். அவரும் அதனை ஏற்றுக் கொண்டாா்’ என்று முகநூலில் பதிவிட்டிருந்தாா்.

இதனை உறுதி செய்த எதிா்க்கட்சி உறுப்பினா் லியோங், ‘இந்த சா்ச்சையைத் தொடர வேண்டாம். ஆக்கபூா்வமான பணிகளில் கவனம் செலுத்தலாம்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com