பயங்கரவாதிகளை பாகிஸ்தான் வெளிப்படையாக ஆதரித்ததை உலக நாடுகள் அறியும்: ஐநாவில் இந்தியா

ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பிரிக்கமுடியாத பகுதியாக இருந்ததுள்ளது; எதிர்காலத்திலும் அது அப்படியே இருக்கும் என இந்தியா மீண்டும் தெரிவித்துள்ளது.
ஐநா பொதுச் சபையில் இந்திய பிரதிநிதி
ஐநா பொதுச் சபையில் இந்திய பிரதிநிதி

சமீபத்தில் ஐநா பொதுச் சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்தும் பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத தலைவரான சையத் அலி ஷா கிலானி குறித்தும் பேசியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள இந்தியா, "ஐக்கிய நாடுகளால் தடை செய்யப்பட்ட பெரும்பாலான பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்து பழிச் செயல்களை செய்வதில் சாதனை படைத்துள்ளது" என தெரிவித்தது.

ஐநாவில் காஷ்மீர் விவகாரத்தை மேற்கோள் காட்டி பாகிஸ்தானை விமர்சித்த இந்தியா, "ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பிரிக்கமுடியாத பகுதியாக இருந்ததுள்ளது; எதிர்காலத்திலும் அது அப்படியே இருக்கும். பயங்கரவாதிகளை தொடர்ந்து ஆதரித்து, உதவி செய்து, அடைக்கலம் அளிப்பதை பாகிஸ்தான் கொள்கையாகவே கொண்டுள்ளது. இது வரலாற்றில் நிரூபணமாகியுள்ளது.

இதுகுறித்து முதல் செயலாளர் சினேகா துபே வெள்ளிக்கிழமை விரிவாக பேசுகையில், "ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் அளித்தது பாகிஸ்தான். அவரை, தியாகியாக இன்று வரை பாகிஸ்தான் தலைவர்கள் புகழ்ந்துவருகின்றனர்.

வெளியில், தீயணைப்பு வீரர் போல் காட்டி கொள்ளும் பாகிஸ்தான் உண்மையில் தீக்குளித்துக் கொண்டிருக்கிறது. கொல்லைப்புறத்தில் பயங்கரவாதிகளை வளர்த்தெடுக்கும் கொள்கையை பாகிஸ்தான் கொண்டுள்ளது. இதனால் ஒட்டு மொத்த உலகமும் பாதிப்படைந்துள்ளது.

எங்கள் நாட்டுக்கு எதிராக ஐநா போன்றவற்றை பயன்படுத்தி பொய்யான தீங்கிழைக்கும் பரப்புரைகளை பாகிஸ்தான் தலைவர்கள் பரப்புவது இது முதல்முறை அல்ல என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

அவர்களது நாட்டில் மக்கள், குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினரின் வாழ்க்கை தலைகீழாக உள்ள நிலையில், பயங்கரவாதிகள் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த துன்பகரமான சூழலை கொண்டு உலகின் கவனத்தை திருப்பவே பாகிஸ்தான் இப்படி செய்கிறது. ஆனால், அது தோல்வி அடைந்துள்ளது" என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com