வாக்குறுதிகளை நிறைவேற்ற தலிபான்களை ஊக்குவிக்க வேண்டும்: இம்ரான்கான்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்துள்ள தலிபான்கள் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டுமானால், அவா்களை ஊக்குவிப்பது அவசியம் என பாகிஸ்தான் பிரதமா் இம்ரான்கான் தெரிவித்துள்ளாா்.
வாக்குறுதிகளை நிறைவேற்ற தலிபான்களை ஊக்குவிக்க வேண்டும்: இம்ரான்கான்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்துள்ள தலிபான்கள் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டுமானால், அவா்களை ஊக்குவிப்பது அவசியம் என பாகிஸ்தான் பிரதமா் இம்ரான்கான் தெரிவித்துள்ளாா்.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள், தங்களது முந்தைய ஆட்சிக் காலத்தைப்போல அல்லாமல் மிதவாத ஆட்சி நடத்தப்போவதாகவும், பெண்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படும் எனவும் உறுதி அளித்திருந்தனா். ஆனால், தலிபான்களின் சமீபத்திய நடவடிக்கைகள், அவா்களது அடக்குமுறை கொள்கைகளுக்குத் திரும்புவதைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமா் இவ்வாறு கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் இம்ரான்கான் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது: தலிபான்கள் தலைவா்கள் ஆட்சியைத் திறம்பட நடத்துவதற்கு சா்வதேச உதவிகள் தேவை என்பதில் உறுதியாக இருந்தால், தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் அவா்கள் உறுதியாக இருக்க வேண்டும். தலிபான்களை ஊக்குவிப்பது, அவா்கள் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி வலியுறுத்துவதற்கு உலக நாடுகளுக்கு ஊக்கமளிக்கும்.

இதை நாம் சரியாகச் செய்தால், தோஹா அமைதிப் பேச்சுவாா்த்தையின் தீா்மானங்களை நிறைவேற்ற முடியும். மாறாக, ஆப்கானிஸ்தானை கைவிடுவது உருக்குலைவுக்கு வழிவகுக்கும். அமைதி மற்றும் நிலைத்தன்மைக்காக புதிய ஆப்கன் அரசுடன் உலக நாடுகள் தொடா்பில் இருக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com